Thursday, 23 November 2017

கொங்கு கோவம்சம் இருபத்துநான்கு பகுதிகள்

                            கொங்கு நாட்டின் இருபத்துநாலு பகுதிகள்
1. Poondurai Nadu (பூந்துறைநாடு) – Erode (ஈரோடு) & Thiruchancode (திருச்செங்கோடு)

2. Thenkarai Nadu (தென்கரைநாடு) – Dharapuram (தாராபுரம்) & Karur (கரூர்)

3. Kangeya Nadu (காங்கேயநாடு) – Dharapuram (தாராபுரம்) & Kankeyam (காங்கேயம்)

4. Pongalur Nadu (பொங்களுர்நாடு) – Palladam (பல்லடம்) & Dharapuram (தாராபுரம்)

5. Arayai Nadu (ஆறைநாடு) – Kovai (கோவை) & Avanasi (அவனாசி)

6. Varakka Nadu (வாரக்கநாடு) – Palladam (பல்லடம்) & Pollachi (பொள்ளாச்சி)  
                                                            
 7. Thiruvavinankudi Nadu (திருவாவினன்குடிநாடு) – Palladam (பல்லடம்) & Pollachi (பொள்ளாச்சி)

8. Mana Nadu (மணநாடு) – South-West region of Karur Taluk (தென்மேற்கு கரூர்)

9. Thalaiyur Nadu (தலையுர்நாடு) – South & West regions of Karur (தென்மேற்கு கரூர்)

10. Thataiyur Nadu (தட்டையூர்நாடு) – Kuliththalai Taluk (குளித்தலை)

11. Poovaniya Nadu (பூவாணிநாடு) – Omalur & Dharmapuri Taluks (ஓமலூர் & தர்மபுரி)

12. Araya nadu (அரையநாடு) – Erode & Namakkal (ஈரோடு & நாமக்கல்)

13. Oduvanga Nadu (ஒடுவங்கநாடு) – Gobi Taluk (கோபி)

14. Vadakarai Nadu (வடகரைநாடு) – Bhavani Taluk (பவானி)

15. Kilakku Nadu (கிழக்குநாடு) – Karur & Kulithalai Nadu (கரூர் & குளித்தலை)

16. Nallurukka Nadu (நல்லுருக்கநாடு) – Udumalaipettai (உடுமலைபேட்டை)

17. Vallavandi Nadu (வாழவந்திநாடு) – Namakkal Northern part, Karur (வட நாமக்கல் & கரூர்)

18. Anda Nadu (அண்டநாடு) – Palani Taluk, Eastern Part (கிழக்கு பழனி)

19. Venkala Nadu (வெண்கலநாடு) – Karur Taluk, Eastern Part (கிழக்கு கரூர்)

20. Kavadikka Nadu (காவடிக்கநாடு)- Pollachi Taluk (பொள்ளாச்சி)

21. Anamalai Nadu (ஆனமலைநாடு) – Pollachi South-West (தென்மேற்கு பொள்ளாச்சி)

22. Rasipura Nadu (ராசிபுரநாடு) – Salem, Rasipuram, Kollimalai (சேலம், ராசிபுரம் & கொல்லிமலை)

23. Kangikovil Nadu (காஞ்சிக்கோவில்நாடு) – Gobi,Bhavani (கோபி & பவானி)

24. Kurumbu Nadu (குறும்புநாடு) – Erode (ஈரோடு)


Monday, 23 October 2017

குலதெய்வமும் விஞ்ஞானமும்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?  'நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள். தெய்வங்களில், குலதெய்வம் மிகவும் வலிமையான தெய்வமாகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை வழங்கி குலத்தினை காக்கிறது. மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தருகிறது. நம் முன்னோர்கள்... அதாவது நம் தந்தைவழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும். குலதெய்வம் சிறு தெய்வமாக இருந்தாலும் அதன் சக்தி அளவிடமுடியாதது. எமன் கூட குலதெய்வத்தின் அனுமதியின்றி அந்த குலத்தில் இருப்பவரின் உயிரை எடுக்கமுடியாது. நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் தான் நம்முடைய குலதெய்வங்கள். அவர்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை உடையவர்கள். எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். அந்த வழி போக்கில் ஒருவர் நிறைய புண்ணியத்தையும், இன்னொருவர் நிறைய பாவத்தையும் கூட செய்திருக்கலாம். ஆனால் அங்கு சென்று தொழும்போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வதிக்கிறார்கள். விஞ்ஞான முறையில்..... ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆண் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மூலம் 23 + தந்தை மூலம் 23 குரோமோசோம்கள் உள்ளன. தாயிடம் ஒஒ குரோமோசோம்களும், தந்தைக்கு ஒல என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்களும் காணப்படும். அதில் ஒ + ல குரோமோசோம்கள் சேர்ந்தால் ஆண் குழந்தையும், இருவரின் ஒ+ஒ சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. ஆண் குழந்தையை உருவாக்கும் ல குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, ல குரோமோசோம்கள் தந்தைவழி வருவதில்லை. ஆனால், ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து ல குரோமோசோம்கள் வருவதால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வாழையடி வாழையாக வளர்கிறது. எனவே இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாகவும், பெண் குழந்தைகளை குல விளக்காகவும் காத்தனர். பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆணின் ல குரோமோசோம்கள் பலவீனமான ஒன்று. அதனால் ஏற்கெனவே பலவீனமான ல குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்... புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்... திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

Saturday, 21 October 2017

குலதெய்வத்தை கண்டறிவது எப்படி

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp குலதெய்வத்தை கண்டறிவது எப்படி? குலதெய்வத்தை கண்டறிவது எப்படி?   தங்கள் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காப்பது குலதெய்வங்கள். சந்தர்ப்ப சு+ழ்நிலை காரணமாகவோ அல்லது கர்ம வினை காரணமாகவோ எது குலதெய்வம் என்றே தெரியாத சு+ழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது? ⭐ ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்களின் அடிப்படையிலும் பார்வை விழும் கிரகங்களின் அடிப்படையிலும் லக்னத்தின் அடிப்படையிலும், சந்திரனின் அடிப்படையிலும் குலதெய்வம் யாரென்று தெரிந்து கொள்ளலாம். ⭐ ஜாதகத்தில் லக்னத்தில் - ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குலதெய்வம் இருந்திருக்கும். ⭐ வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பு+ஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு திருநீறு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பு+ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, 'எங்கள் குலதெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குலதெய்வத்தைக் காட்டுவீராக" என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும். ⭐ உங்கள் வீட்டின் தலை வாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பு+சி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பு+ஜை செய்து 'எங்கள் குலதெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக" அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குலதெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும். ⭐ குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்தால், வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். ழூ இதுவரை வெளிவந்த ஜோதிடர் பதில்களின் தொகுப்பை Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

Wednesday, 27 September 2017

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!


தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

 * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

 * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

 * ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

 * பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

 * உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

 * பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

 * ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

 * பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

 * சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

 * ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

 * ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

 * பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

 * மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

 * அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

 * வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

 * மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

 * அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

 * திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

 * சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

 * ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 * திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

 * ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

 * 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

 [இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

Sunday, 23 July 2017


இன்று முன்னோர்களின் ஆசியை வழங்கும் ஆடி அமாவாசை விரதம்

ஆடி அமாவாசை



ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை !



ஆடி அமாவாசை தினம் இந்துக்களின் புனிதமான தினமாகும். அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் காலம். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை  உறவினர்கள்.

இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை. அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள்.

புராணக் கதை :

🌒 அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம்மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு 16 வயதில் ஆயுள் முடியும் என்று ஒருநாள் காளி மாதாவிடமிருந்து வாக்கு வெளிப்பட்டது. அதைக்கேட்ட மன்னன் தன் மகனுக்காக தன்னுயிரை இழக்கத் துணிந்தான். அப்போது மீண்டும் காளிமாதா தோன்றி 'உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான்" என்றாள்.

🌒 இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த கங்காவை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான கங்கா கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. கதறினாள்.. தவித்தாள்..

🌒 அப்போது வான் வழியே சிவனும் பார்வதியும், சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் கதறல் கேட்டது. இருவரும் அவளிடம் வந்தனர். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை. தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும்
பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.



 வேண்டும் வேண்டும் மெய் அடியார் உள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் இடர் களைந்த அமுதே அருமா மணி முத்தே தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம் கொல் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே!

பொருள் : அடியேனது பிறவிப் பிணியைப் போக்கியவனே, மிகுதல், குறைதல் இன்றி ஔி வீசும் தூண்டா விளக்கென ஒளிர்பவனே, உனது அருளை வேண்டி நாடி நிற்கின்ற அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்து வைத்தாய். உன் திருவடியை அடைய உதவாத உலக நாட்டம் ஏதும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு உன் திருவருளையே நாடி அன்பு செய்து நிற்க அருள் புரிய வேண்டும்.
♦திருச்சிற்றம்பலம்♦

Friday, 7 July 2017



                  குலம் கோத்திரம்



 https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-1675080909419057/வாரக்க்கநாடு
https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-1675080909419057/

https://www.facebook.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1510308739249694/

பூமேவு தென்சேரி திருவளர் களந்தையும்
கழ்கொண்ட பல்லடமுடன்
பூமலூரழகாய பேறைமா நஅகரமும்
புகல்குயிலை
சூரவூரும்
தேமேவு சோலைசெறி சாமளா புரமெழிற்
செய்புதுவை வெள்ளலூரும்
திரமான கோடிநகர் மங்கலம் வாகையொளிர்
சேர்நிகம மாவலூரும்
பாமேவு வாணிகுடி கொண்டிலகு மிரவலர்கள்
பகரவரி தாயபுத்தூர்
பன்னுமறை யந்தணர்கள் வாழ்விற் செழித்திடும்
பழமைமிகு சிங்கநல்லூர்
மாமேவு செந்தாமரைப் பொய்கை யுங்காஞ்சி
மாந்திவயங்கு மேலாம்
மாநிலம் புகழ்மந்திர கிரிமுருகர் வாசஞ்செய்
வாரக்க நாடுதானே!

Sunday, 2 July 2017

                                                                 ஆண்டுவிழா                                                                                                                                                                              




இவ்வினிய  விழாவை   தொடர்ந்து முதலாமாண்டு நிறைவு விழா  அனைத்துஉயிர்களும் நலம்பெற்று இன்புற்று வாழ சங்கல்பம் செய்யப்பட்டு, உலகநல வேள்வியுடன்மிகச்சிறப்பாக நடைபெற்றது.

   







 

  
 








 








Friday, 30 June 2017


நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்' என்பார்கள். 

குலதெய்வ வழிபாட்டை அத்தனை எளிதாக எல்லோராலும் செய்யமுடிவதில்லை.

குலதெய்வ
 
படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று  சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாது. காரணம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்ட இன்றைய சூழலில், குலதெய்வம் பற்றிய விவரங்களைக் குடும்பப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாத நிலை. 

குலதெய்வமே என்னவென்று தெரியாதவர்கள் எப்படி தங்களுடைய குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு வழிபடுவது என்பதுபற்றி தொகுப்பு இதோ...  
''மனிதன் தீராத பிரச்னைகளால் மனக்கவலை வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்பப் பெரியவர்களைக் கேட்கிறான்.
 சிலர்  தங்களது குடும்ப வழக்கப்படி கோடங்கி பார்ப்பவரை அழைத்து உடுக்கடித்து தெய்வத்திடம் குறி கேட்பார்கள். சிலர் ஜாதகத்தை, குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர், 'உங்கள் பூர்வீக குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள், எல்லாம் சரியாகும்' என்பார்.  
சில குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம்.
சில குடும்பத்துப் பெரியவர்களுக்குக்கூட  அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வது? இங்கேதான் அவர்களுடைய ஜாதகம் உதவுகிறது.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டுபிடிக்க முடியுமா?  நிச்சயமாக முடியும்.
ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும்.  5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். 9-ம் இடத்துக்கு 9-ம் இடம் 5-ம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தைச் சொல்லுமிடமாகும். ஆகவே இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம். 
இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா,  நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம்  இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். 
நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின்  ஜாதகத்தில் இருந்து  கண்டுபிடிக்கலாம். 
ஒரு குடும்பத்துக்கு குல தெய்வம் ஒன்றும், அதன் பரிவார தெய்வங்கள் இரண்டும் சம்பந்தம் கொள்ளும். அதாவது ஒருவரின் பூர்வீகத்தில் அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 
சிலர் கேட்கலாம்...  
எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று கேட்டால், அதைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம். 
நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய  துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி,  “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத்தெரியவரும்.இன்னொரு முறையும் இருக்கிறது. 
உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.

மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒருகுடும்பத்துக்கு வரும்.
 அதாவது 
ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். 
அது பெருமாளாக இருக்கலாம்,சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். 

அடுத்து குலதெய்வம். 

பிறகு காவல் தெய்வமாக    ஒரு தெய்வம் - அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம். 
மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார்,  மதுரை வீரன், காத்தவராயன் , ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர்.  இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே பொதும். அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று, எந்தக் கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள்.                                                                                    சுபம்

Tuesday, 27 June 2017

பஞ்சபுராணம்பாடுதல்

ஓம் சிவ சிவ ஓம் 


*பஞ்சபுராணம்பாடுதல் என்ற வழக்கம்* 


*முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது.*


தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. 


சமயக் குரவர்கள்,

திருமூலர்,

சேக்கிழார்,

திருமாளிகைத்தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. 


அவற்றில் . . .

 *தேவாரம் (7 திருமுறைகள்),*


*திருவாசகம் (திருக்கோவையார்),*


*திருவிசைப்பா,* 


*திருப்பல்லாண்டு,* 


*திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)*


ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. 


*இதுவே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படுகிறது.*


சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. 


பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். 


பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.


சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள்.


அவர்கள் முடித்த பிறகு தமிழ் வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்சபுராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.


மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

*விநாயகர் வணக்கம்*


"ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்*


"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் 

காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்*


"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் 

பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி 

உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த 

செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் 

எங்கு எழுந்தருளுவது இனியே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*சேந்தனார் அருளிய திருவிசைப்பா*


"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்

கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை

மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்

திருவீழிமிழலை வீற்றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்

குளிரஎன் கண் குளிர்ந்தனவே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு*


"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*சேக்கிழார் அருளிய பெரியபுராணம்*


"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்*


"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே

ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்*


"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


*திருஞானசம்பந்தர் அருளியது தேவாரம்*


"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே."

----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----


"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!

கயிலை மலையானே போற்றி! போற்றி!


                 *திருச்சிற்றம்பலம்*