கோவம்சம் ( லிங்காயத்தார் --ஆண்டிபண்டாரம் – ஜங்கமர் - யோகீஸ்வரர் – கோவம்சம்- - தம்பிரான்-- பூசாரி -புலவர் – தேசிகர் - அய்யர் - சிவாச்சாரியர்கள் –மூர்த்தி - ஜோகி – பண்டாரம் – ஆண்டி – ஐயா - கண்ணடியர் – வைராவி - - மெய்க்காவல் - ஓதுவார் - மணியகாரர் - குருக்கள் –உவச்சர் போன்ற பெயர்களில் வாழ்ந்து வளர்ந்து வருகின்ற அனைத்து வீரசைவ உறவுகள்)
Monday, 23 October 2017
குலதெய்வமும் விஞ்ஞானமும்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

'நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள். தெய்வங்களில், குலதெய்வம் மிகவும் வலிமையான தெய்வமாகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை வழங்கி குலத்தினை காக்கிறது. மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தருகிறது.
நம் முன்னோர்கள்... அதாவது நம் தந்தைவழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும்.
குலதெய்வம் சிறு தெய்வமாக இருந்தாலும் அதன் சக்தி அளவிடமுடியாதது. எமன் கூட குலதெய்வத்தின் அனுமதியின்றி அந்த குலத்தில் இருப்பவரின் உயிரை எடுக்கமுடியாது.
நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் தான் நம்முடைய குலதெய்வங்கள். அவர்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை உடையவர்கள். எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
அந்த வழி போக்கில் ஒருவர் நிறைய புண்ணியத்தையும், இன்னொருவர் நிறைய பாவத்தையும் கூட செய்திருக்கலாம். ஆனால் அங்கு சென்று தொழும்போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.
விஞ்ஞான முறையில்.....
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆண் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மூலம் 23 + தந்தை மூலம் 23 குரோமோசோம்கள் உள்ளன.
தாயிடம் ஒஒ குரோமோசோம்களும், தந்தைக்கு ஒல என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்களும் காணப்படும். அதில் ஒ + ல குரோமோசோம்கள் சேர்ந்தால் ஆண் குழந்தையும், இருவரின் ஒ+ஒ சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது.
ஆண் குழந்தையை உருவாக்கும் ல குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, ல குரோமோசோம்கள் தந்தைவழி வருவதில்லை.
ஆனால், ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து ல குரோமோசோம்கள் வருவதால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வாழையடி வாழையாக வளர்கிறது.
எனவே இதன் முக்கியத்துவம் அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாகவும், பெண் குழந்தைகளை குல விளக்காகவும் காத்தனர்.
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆணின் ல குரோமோசோம்கள் பலவீனமான ஒன்று.
அதனால் ஏற்கெனவே பலவீனமான ல குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்... புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment