வேண்டும் வேண்டும் மெய் அடியார் உள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் இடர் களைந்த அமுதே அருமா மணி முத்தே தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம் கொல் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே!
பொருள் : அடியேனது பிறவிப் பிணியைப் போக்கியவனே, மிகுதல், குறைதல் இன்றி ஔி வீசும் தூண்டா விளக்கென ஒளிர்பவனே, உனது அருளை வேண்டி நாடி நிற்கின்ற அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்து வைத்தாய். உன் திருவடியை அடைய உதவாத உலக நாட்டம் ஏதும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு உன் திருவருளையே நாடி அன்பு செய்து நிற்க அருள் புரிய வேண்டும்.
♦திருச்சிற்றம்பலம்♦
No comments:
Post a Comment