Sunday, 23 July 2017


இன்று முன்னோர்களின் ஆசியை வழங்கும் ஆடி அமாவாசை விரதம்

ஆடி அமாவாசை



ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை !



ஆடி அமாவாசை தினம் இந்துக்களின் புனிதமான தினமாகும். அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் காலம். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை  உறவினர்கள்.

இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை. அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள்.

புராணக் கதை :

🌒 அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம்மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு 16 வயதில் ஆயுள் முடியும் என்று ஒருநாள் காளி மாதாவிடமிருந்து வாக்கு வெளிப்பட்டது. அதைக்கேட்ட மன்னன் தன் மகனுக்காக தன்னுயிரை இழக்கத் துணிந்தான். அப்போது மீண்டும் காளிமாதா தோன்றி 'உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான்" என்றாள்.

🌒 இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த கங்காவை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான கங்கா கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. கதறினாள்.. தவித்தாள்..

🌒 அப்போது வான் வழியே சிவனும் பார்வதியும், சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் கதறல் கேட்டது. இருவரும் அவளிடம் வந்தனர். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை. தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும்
பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.



 வேண்டும் வேண்டும் மெய் அடியார் உள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் இடர் களைந்த அமுதே அருமா மணி முத்தே தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம் கொல் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே!

பொருள் : அடியேனது பிறவிப் பிணியைப் போக்கியவனே, மிகுதல், குறைதல் இன்றி ஔி வீசும் தூண்டா விளக்கென ஒளிர்பவனே, உனது அருளை வேண்டி நாடி நிற்கின்ற அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்து வைத்தாய். உன் திருவடியை அடைய உதவாத உலக நாட்டம் ஏதும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு உன் திருவருளையே நாடி அன்பு செய்து நிற்க அருள் புரிய வேண்டும்.
♦திருச்சிற்றம்பலம்♦

Friday, 7 July 2017



                  குலம் கோத்திரம்



 https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-1675080909419057/வாரக்க்கநாடு
https://www.facebook.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-1675080909419057/

https://www.facebook.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1510308739249694/

பூமேவு தென்சேரி திருவளர் களந்தையும்
கழ்கொண்ட பல்லடமுடன்
பூமலூரழகாய பேறைமா நஅகரமும்
புகல்குயிலை
சூரவூரும்
தேமேவு சோலைசெறி சாமளா புரமெழிற்
செய்புதுவை வெள்ளலூரும்
திரமான கோடிநகர் மங்கலம் வாகையொளிர்
சேர்நிகம மாவலூரும்
பாமேவு வாணிகுடி கொண்டிலகு மிரவலர்கள்
பகரவரி தாயபுத்தூர்
பன்னுமறை யந்தணர்கள் வாழ்விற் செழித்திடும்
பழமைமிகு சிங்கநல்லூர்
மாமேவு செந்தாமரைப் பொய்கை யுங்காஞ்சி
மாந்திவயங்கு மேலாம்
மாநிலம் புகழ்மந்திர கிரிமுருகர் வாசஞ்செய்
வாரக்க நாடுதானே!

Sunday, 2 July 2017

                                                                 ஆண்டுவிழா                                                                                                                                                                              




இவ்வினிய  விழாவை   தொடர்ந்து முதலாமாண்டு நிறைவு விழா  அனைத்துஉயிர்களும் நலம்பெற்று இன்புற்று வாழ சங்கல்பம் செய்யப்பட்டு, உலகநல வேள்வியுடன்மிகச்சிறப்பாக நடைபெற்றது.