Tuesday, 12 November 2019

குலதெய்வம்

*"ஆண்டியை அரசனாக்குவதும்... அரசனை ஆண்டி ஆக்குவதும் நம் குல தெய்வமே!"*
               

*குலதெய்வங்கள் என்றால் என்ன ..?*
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும்.

குல தெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே நம் குல தெய்வம் மகிழ்வோடு இருக்கிறாளா?இல்லையா? என்பதைக் காண்பித்து விடும்.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குல தெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே!...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமசோமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழி வழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.

இது வரை யாரும் பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல் போல் தழைத்து, அருகு போல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி அல்லது குறைந்தது வருடம் ஒரு முறையாவது செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

அக்கோவிலுக்கு மனதார உதவுங்கள்.

குல தெய்வத்திற்கு
சரியான உணவு படைக்கப் படுகிறதா?
மகிழ்வூட்டும் மலர்கள் படைக்கப் படுகிறதா?
அபிஷேக பொருட்கள் தூய்மையாக உள்ளதா?
எத்தனை வகை அபிஷேகம் அளிக்கப் படுகிறது?
குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் போற்றப் படுகிறதா?
தெய்வத்தை வழிபாடு செய்யும் மனமார்ந்த அர்ச்சகர் உள்ளாரா?
என்பதை கண்காணிப்பது ஒவ்வொரு பக்தனின் கடமை என்பது நினைவிருக்கட்டும்.
"நமக்கென்ன" என்று இருந்தீர்கள் என்றால் அதுவும் உங்களுக்கு தெய்வ குற்றமே!

நான் வெளியூரில் இருக்கிறேன் என்று தப்பவும் இயலாது.எங்க அம்மாவை பட்டினி போட்டு விட்டு நான் வெளி ஊரில் இருப்பதால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னால் நீங்களும் தப்ப இயலாது.

பெற்றவளுக்கு நேரம் தந்து காப்பதும் உங்கள் கடமை.

ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."

எனவே, நம் முதல் குல தெய்வமான பெற்றோர்களை முதலில் போற்றி
நம்குல தெய்வத்தை காத்து போற்றுங்கள்

Saturday, 8 June 2019

விகாரி* வருடத்தின்*தரித்திய_யோக நாட்கள்

             *ஓம் சரவண பவ!!!*

  *எச்சரிக்கை!* *எச்சரிக்கை!!*
 *விகாரி ஆண்டில் எச்சரிக்கை!!!* நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க (செயல்பட) வேண்டிய நாட்கள்!!! எனவே எச்சரிக்கை! எச்சரிக்கை!! *பொருளாதத்தை கையாளும் தொழில் அதிபர்களுக்கும்,குடும்பத்தை காத்து பொருள் சேர்க்கும் குடும்ப தலைவன் தலைவிக்கும்* *எச்சரிக்கை! எச்சரிக்கை!!*

  கிழமைகளுடன் சில நட்சதிரங்கள் இணையும் போது *தரித்திர_யோகம்* ஏற்படுகிறது என்கிறது நமது பாராம்பரிய ஜோதிட  சாஸ்திரம்.

  அந்த வகையில் இந்த வருடமான *விகாரி* வருடத்தில் *தரித்திய_யோக நாட்களை* வகைப்படுத்தியிருக்கிறேன். அவற்றை அறிந்து கொண்டு கவனமாக செயல்படுவோம்.

  *தரித்திய_யோகத்திற்க்கான_விதி :*

    *ஞாயிறுக்கிழமையுடன் அனுசம்* நட்சதிரமும்,
 *திங்கட்கிழமையுடன் உத்திராடம்* நட்சதிரமும்,
*செவ்வாய் கிழமையுடன் சதயம்* நட்சதிரமும்,
*புதன்கிழமையுடன் அசுவதி* நட்சதிரமும்,
*வியாழக்கிழமையுடன் மிருகசீரிடம்* நட்சதிரமும்,
*வெள்ளிக்கிழமையுடன் ஆயில்யம்* நட்சதிரமும்,
*சனிக்கிழமையுடன் அஸ்தம்* நட்சத்திரமும்
இணைந்து வந்தால் தரித்திர *யோகம் என்பது சாஸ்திர விதி.*

  இந்த நாட்களில் வங்கியில் புது கணக்கு தொடங்கவும், மருந்துண்ணவும், தானியங்கள் கொடுக்கவும்,விதை விதைக்கவும், பேயி, பிசாசு,ஓட்டவும், ரத்தின ஆபரணங்கள் அணியவும் கூடாது.கடன் வாங்கினால் அதை தீர்க்க முடியாது. கூட்டம் கூட்டினால் அவமானம் நேரும். விருந்துக்கும் ஆகாத நாட்களே என்கிறது நமது பாராம்பரிய வழிகாட்டி நூல்.

எனவே  இந்த *விகாரி_வருடத்தில் வரும் தரித்தியயோக நாட்களை* பட்டியலிட்டிருக்கிறேன் அனைவரும் பயன்படுத்திக் பயன்பெறுங்கள்.

  1 (30 .04.2019)
 அன்று விகாரி வருடம் சித்திரை மாதம் 17 ந் தேதி செவ்வாய் கிழமையும் சதயம் நட்சதிரமும் இணைக்கிறது. இன்று காலை சூரிய உதயம் முதல் காலை மணி  8.15 வரையும்

2  (19.05.2019)
அன்று விகாரி வருடம் வைகாசி மாதம் 5 ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் அனுசம் நட்சதிரமும் இணைக்கிறது. இன்று காலை மணி 6.50 முதல் நடு இரவு 2.00 மணி வரையும்

3  (07.06.2019)
அன்று விகாரி வருடம் வைகாசி மாதம் 24 ந் தேதி வெள்ளிக்கிழமையும் ஆயில்யம் நட்சதிரமும் இணைகிறது. இன்று மாலை மணி 5.30 முதல் இரவு முழுதும்.

4  (16.06.2019)
அன்று விகாரி வருடம் ஆனி மாதம் 1 ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் அனுசம் நட்சதிரமும் இணைகிறது. இன்று  காலை சூரிய உதயம் முதல் காலை10.00 மணி  வரையும்.

5  (05.07.2019)
அன்று விகாரி வருடம் ஆனி மாதம் 20 ந்தேதி  வெள்ளிக்கிழமையும் ஆயில்யம் நட்சதிரமும் இணைகிறது. இன்று காலை சூரிய உதயம் முதல் நடு இரவு 12.15 வரையும்.

6  (2.08.2019)
அன்று விகாரி வருடம் ஆடி மாதம் 17 ந்தேதி வெள்ளிக்கிழமையும் ஆயில்யம் நட்சதிரமும் இணைக்கிறது. இன்று காலை சூரிய உதயம் முதல் காலை மணி 9.30 வரையும்.

7  (21.08.2019)
அன்று விகாரி வருடம் ஆவணி மாதம் 4 ந்தேதி புதன்கிழமையும் அசுபதி நட்சதிரமும் இணைகிறது. இன்று காலை சூரிய உதயம் முதல் நடு இரவுமணி 12.45 வரையும்.

8  (9.09.2019)
அன்று விகாரி வருடம் ஆவணி மாதம் 23 ந்தேதி திங்கட்கிழமையும் உத்திராடம் நட்சதிரமும் இணைக்கிறது. இன்று  காலை மணி 8.40 முதல் அன்று முழுவதும்

9  (18.10.2019)
அன்று விகாரி வருடம் புரட்டாசி மாதம் 01 ந் தேதி புதன்க்கிழமையும்  அசுவினி நட்சதிரமும் இணைக்கிறது. இன்று காலை மணி 6.45 வரை மட்டும்.

10  (7.10.2019)
அன்று விகாரி வருடம் புரட்டாசி மாதம் 20 ந்தேதி திங்கட்கிழமையும் உத்திராடம் நட்சதிரமும் இணைகிறது. இன்று காலை மணி சூரிய உதயம் முதல்  மாலை மணி 5.25 வரை.

11  (26.10.2019)
அன்று விகாரி வருடம் ஐப்பசி மாதம் 9 ந் தேதி சனிக்கிழமையும் அஸ்தம் நட்சதிரமும் இணைக்கிறது. இன்று காலை மணி8.30 முதல் அதிகாலை 5.50 வரையும்

12  (12.12.2019)
அன்று விகாரி வருடம் கார்த்திகை மாதம் 26 ந்தேதி வியாழக்கிழமையும் மிருகசீரிடம் நட்சதிரமும் இணைகிறது. இன்று சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும்

 13  (31.12.2019)
அன்று விகாரி வருடம் மார்கழி மாதம் 15 ந்தேதி செவ்வாய்கிழமையும் சதயம் நட்சதிரமும் இணைகிறது. இன்று காலை சூரிய உதயம் முதல் நடுஇரவு மணி 1.30 வரையும்.

14   (09.01.2020)
 அன்று விகாரி வருடம் மார்கழி மாதம் 24 ந்தேதி வியாழக்கிழமையும் மிருகசீரிடம் நட்சதிரமும் இணைக்கிறது. அன்று காலை சூரிய உதயம் முதல் மாலை மணி 3 .40 வரையும்.

15  (28.01.2020)
அன்று விகாரி வருடம் தைமாதம் 14 ந்தேதி செவ்வாய் கிழமையும் சதயம் நட்சதிரமும் இணைக்கிறது. காலை சூரிய உதயம் முதல் காலை மணி 9.30 வரையும்

16  (16.02.2020)
அன்று விகாரி வருடம் மாசி மாதம் 4 ந்தேதி ஞாயிறுக்கிழமையும் அனுசம் நட்சதிரமும் இணைக்கிறது. இன்று காலை சூரிய உதயம் முதல்  அதிகாலை மணி 4.50 வரையும்.

17  (15.03.2020)
அன்று விளம்பி வருடம் பங்குனி மாதம் 15 ந்தேதி  ஞாயிற்றுக்கிழமையும் அனுசம் நட்சதிரமும் இணைகிறது. இன்று காலை சூரிய உதயம் முதல் காலை மணி11.25 வரையும்.

18 (03.04.2020)
 அன்று விகாரி வருடம் பங்குனி மாதம் 21 ந்தேதி வெள்ளிக்கிழமையும் ஆயில்யம் நட்சதிரமும் இணைகிறது  இன்று மாலை  மணி 6.40 முதல் மறுநாள் காலை வரையும்.

  இதோ_இதற்கான_*ஆதாரப்பாடல்*

*அனுடமொடு_நாயிறும்_உத்திராடந்திங்கள்*
  *அங்காரகன்_சதையமும்அசுவதி_புதன்வார_மிருகசீரிடங்குரு*
  *ஆயில்யம்சுக்கிரவாரம் சனிவாரம்_அஸ்தமும்_கூடிவரு_மாயினது*
    *தாரித்ர_யோக_மென்பார்தனம்புதைத்திடவும்_நல்மருந்துண்ணவும்_ஆகாது*
    *தானியம்_விதைக்_கொணாது முனியோட்டலாகாது_கடன்கொளிற்_றீராது*
   *முத்தணிகள்_பூணலாகாமுதல்விருந்தாகாது_சபைகூடி_லவமானம்*
  *முழு_மிடியானம்_உதிக்கில்கனியினுக்கு_உலகைவலம்_வந்தவன்_தந்தையே*

*கற்பக விராச மேவும்*
*கங்கைபுனைஈசனே* *ங்கைமகிழ்_நேசனே*
  *கயிலயங்_கிரி_வாசனே*
 என்கிறது பாடல்....
           
                    நன்றி🙏

Monday, 29 April 2019

                        திருச்செந்தூர்

ஆண்டிகள் மடம் கட்டிய கதை என்று கூறுவார்கள் ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

🌺 பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.

🌺 கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.

🌺 அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

🌺 ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

🌺 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

🌺 எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

🌺 திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

🌺 இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது

🌺 திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா

1. #மௌனசுவாமி

2. #காசிசுவாமி

3. #ஆறுமுகசுவாமி
இவர் ராஜகோபுரம் கட்டியவர்

4. #ஸ்ரீவள்ளிநாயகசுவாமி

5. #தேசியமூர்த்திசுவாமி.
எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!

🌺 தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும்  நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.

🌺 இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்...

தரிசனம் செய்ய செல்லும் வழி :-

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே #மூவர்_சமாது என்ற பெயருடனே அமைந்துள்ளது நல்ல அமைதியான இடம்

#நான்காவதாக,
ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து  சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

#ஐந்தாவதாக,
ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு  என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது  ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை. 

அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்.